பா துவா நகரிலிருந்து தூய அந்தோனியாரின் திருப்பண்டம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. கொழும்புப் பேராயர் அதி வந்தனைக்குரிய மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களின் ஒழுங்கமைப்போடு பாதுவா நகரிலிருந்து தூய அந்தோனியாரின் திருப்பண்டம் (அருட்பொருட்கள்) இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாண்டு பங்குனித் திங்கள் 05ம் நாள் தொடக்கம் 18ம் நாள்வரையிலுள்ள காலப் பகுதியில் இலங்கையின் பல மறைமாவட்டங்களுக்கும் தூய அந்தோனியாரின் அருட்பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இலங்கை மக்கள் தூய அந்தோனியாரின் அருட்பொருட்களைப் பார்க்கும் அரிய பேற்றினை இதன் மூலம் பெற்றுக் கொள்ளுகின்றனர். இவ்வாண்டு 175ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோனியாரின் ஆலயத்திற்கு எடுத்துவரப்படுகின்றது.அதன் பின் கீழ்வரும் ஒழுங்கமைப்பில் இலங்கையின் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.
நிகழ்ச்சி நிரல். 05.03.2010 பாதுவா நகரிலிருந்து எடுத்துவரப்படும் தூய அந்தோனியாரின் அருட்பொருட்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நியைத்திலிருந்து கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோனியாரின் ஆலயத்திற்கு எடுத்துவரப்படும். 10.03.2010 காலி மறைமாவட்டப் பேராலயத்திற்கு. 11.03.2010 பண்டாரவளை தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 12.03.2010 மட்டக்களப்பு தூய அந்தோனியார் பேராலயத்திற்கு. 13.03.2010 அனுராதபுரம் பேராலயத்திற்கு 13.03.2010 மதவாச்சி ஆலயத்திற்கு.(இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு) 14.03.2010 யாழ்ப்பாணம்: மானிப்பாய் தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 15.03.2010 மன்னார் தள்ளாடி தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 16.03.2010 கொட்டப்பிட்டிய தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 16.03.2010 குருநாகல் : பள்ளந்தெனிய தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 17.03.2010 கண்டி தூய அந்தோனியார் பேராலயத்திற்கு. 17.03.2010 லயனகெமுல்ல தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 18.03.2010 மீண்டும் பாதுவா நகரிற்கு. |